திண்டிவனத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

திண்டிவனத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நீதிமன்ற ஊழியர்கள் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வல்லரசு(வயது 14). 10-ம் வகுப்பு மாணவனான இவன், நல்லாவூரில் இருந்து புதுகுப்பம் அரசு பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தில் பயணம் செய்தான். அப்போது டிரைவர் பிரேக் போட்டதால் வல்லரசு கீழே விழுந்து இறந்தான். இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர், நஷ்டஈடு கேட்டு திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து, சிறுவனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்து 932 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் நஷ்டஈடு தொகை வழங்காததால் நீதிபதி சுதா உத்தரவின்படி திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் வந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!