இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்
X

மரக்காணம் அருகே இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான் 

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே உள்ள இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் 249 குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக ரூ.19.56/-இலட்சம் மதிப்பீட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது விழுப்புரம் மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலரும்,அரசு முதன்மை செயலாளருமான ஹர்சஹாய் மீனா, மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவா.ந.ஸ்ரீநாதா, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார்,திண்டிவனம் உதவி கலெக்டர் எம்.பி.அமித்,பொது மற்றும் மறுவாழ்த்துறை துணை இயக்குநர் ரமேஷ்மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!