புயல் பல்நோக்கு மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

புயல் பல்நோக்கு மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
X

புயல் பல்நோக்கு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மஸ்தான் 

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள புயல் பல்நோக்கு மையத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது, மேலும் வானிலை அறிக்கையின்படி விழுப்புரம் மாவட்டதிற்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது,

இதனையடுத்து அமைச்சர் மஸ்தான் மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு பல்நோக்கு மையத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!