மரக்காணம் அருகே கோயில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

மரக்காணம் அருகே கோயில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு
X
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோயில் குளத்தில் தவறி விழுந்தவரை பிணமாக மீட்டனர்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் திருக்குளத்தில் இன்று ஆண் ஒருவர் தவறி விழுந்தார் . இதனைக் கண்ட பொதுமக்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பொதுமக்கள் குளத்தில் தவறி விழுந்தவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் மரக்காணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்திற்குள் இறங்கி உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!