காஞ்சிபுரம் மாவட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் மாவட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
X

லோகநாதன்.

Gangster Act -திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து வழி பொறியியல் ஈடுபட்டு வந்த காஞ்சிபுரம் மாவட்ட வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Gangster Act -காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, குருமஞ்சேரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் லோகநாதன் (வயது 20). இவர் மீது திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 11.8.2022 அன்று கீழ்மாவிலங்கை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 13 பவுன் நகையை பறித்துச் சென்ற வழக்கில் லோகநாதன், அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் ஆகிய இருவரையும் வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தில் வினோத்குமாரை கடந்த 19/9/22 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் லோகநாதனும் தொடர்ந்து, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதை ஏற்று ஆட்சியர் மோகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் லோகநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு