கல்லூரி மாணவியிடம் பாலிஷ் போட்டு தருவதாக கூறி நகை அபேஸ்

கல்லூரி மாணவியிடம் பாலிஷ் போட்டு தருவதாக கூறி நகை அபேஸ்
X

பைல் படம்.

Gold Polish Chain- திண்டிவனம் அருகே வீட்டிலிருந்த கல்லூரி மாணவியிடம் பாலிஷ் போட்டு தருவதாக நகையே அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Gold Polish Chain- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வேம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகள் பாரதி (வயது 18). இவர் கல்லூரி மாணவி. இவர் வீட்டில் படித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், பாரதியிடம், பழைய பாத்திரங்கள், விளக்கு ஏதும் இருந்தால், கொடுங்கள் நாங்கள் பாலீஷ் போட்டு அதனை புதியது போன்று மாற்றி தருகிறோம் என கூறியுள்ளனர். இதையடுத்து பாரதி வீட்டில் இருந்த பித்தளை விளக்கை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அதை பாலீஷ் போட்டு கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மர்மநபர்கள், நகை இருந்தால் கொடுங்கள் அதனையும் பாலீஷ் போட்டு தருகிறோம் என பாரதியிடம் கூறியுள்ளனர். அதனை நம்பிய பாரதி, 1¼ பவுன் நகையை அவர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது அதனை பாலீஷ் போடுவது போன்று நடித்த மர்மநபர்கள், அந்த நகையை அபேஸ் செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story