திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று நலதிட்ட உதவி வழங்கினார்.
Jamabandi - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்ட த்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களுக்கான கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் மொத்தமாக 1034 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இவற்றில் 79மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 501 மனுக்கள் பரிசீலனையில் (நிலுவையில்) உள்ளது. 454 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித்தொகைகோரி மனு அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதியுடைய 454 பயனாளிகளுக்கு அவற்றிற்கான சான்றிதழ் ஆணையினை வழங்கினார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன் சொந்த செலவில் பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்.இதில் சப்-கலெக்டர் அமித்,வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிக்குமார், சிவகுமார்எம்.எல்.ஏ. ,மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ஷிலா தேவி சேரன், யூனியன் தலைவர்கள் சொக்கலிங்கம், யோகேஸ்வரி ,மணிமாறன்,துணைத் தலைவர் பழனி,திண்டிவனம் நகர மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu