'கோலூன்றி மக்கள் பணியாற்றுவேன்' -பிறந்த நாள் விழாவில் டாக்டர் ராமதாஸ்

கோலூன்றி மக்கள் பணியாற்றுவேன் -பிறந்த நாள் விழாவில் டாக்டர் ராமதாஸ்
X

தனது சொந்த கிராமத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்றார்.

Anbumani Ramadoss Latest News - 'கோலூன்றியாவது மக்கள் பணியாற்றுவேன்' - என சொந்த கிராமத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Anbumani Ramadoss Latest News - விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் அருகே கீழ்சிவிரி கிராமத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 84-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சொந்த ஊரில் நடைபெற்ற இ்ந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு அவரது வயதை குறிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட 84 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவருக்கு கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து டாக்டர் ராமதாஸ் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டிற்கு சென்றார். அங்கு அவரின் பெற்றோர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கீழ்சிவிரி கிராமத்தில் அமைக்கப்பட்ட விழா மேடைக்கு சென்று பேசுகையில் என் வாழ்நாளில் லட்சக்கணக்கான வரவேற்பை பார்த்துள்ளேன். ஆனால் எனது ஊரில் வரவேற்போடு எனது மக்களோடு இன்று நான் இருக்கிறேன். இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலில் தான் எனது நண்பர்களுடன் பம்பரம், கில்லி, கோலி, ஓடி பிடித்து விளையாடி இருக்கிறேன். விடிய, விடிய தெருக்கூத்து பார்த்த ஞாபகங்கள் வருகிறது. 83 ஆண்டுகள் முடிந்து 84-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இங்கு குளம் வெட்டி இருக்கிறார்கள். என்னுடைய கண்ணீர் முழுவதும் அந்த குளத்தில் கலக்கிறது. இன்னும் எத்தனை வயதானாலும், நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று மக்களுக்காக பாடுபடுவேன் என்றார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார். விழாவில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை தலைவர்கள் கருணாநிதி, சங்கர், மாநில தலைமை செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பணி செயலாளர் செல்வகுமார், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுப்பராயலு, ராஜி, மாநில சட்டப் பாதுகாப்பு செயலாளர் வக்கீல் பாலாஜி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு