மரக்காணம் அருகே முன் விரோத தகராறு: 6 பேர் மீது போலீசார் வழக்கு

Villupuram News | Police Case
X

பைல் படம்.

Villupuram News -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி மரக்காணம் அருகே ஆறு பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Villupuram News -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி,மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குடும்பத்திற்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

முத்துராமன், அவரது மருமகள் மகாலட்சுமி ஆகியோர் அந்த பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கோழி பண்ணையில் இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சங்கர் குமார் ஆனந்த் அய்யனாரப்பன் புருஷோத் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் இரும்பு பைப் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று முத்துராமன் மற்றும் அவரது மருமகளை தாக்கியுள்ளனர்.

இதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இவர்களை அழைத்து சென்று சிறுவாடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

அங்கிருந்து ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் பெற்றுள்ளனர். இந்த சம்பவ குறித்து முத்துராமனின் உறவினர் வசந்த ராஜ் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது மரக்காணம் போலீசார் சதீஷ் உட்பட 6பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது