வீடு தேடி மருந்து பெட்டகம் திட்டம்: மத்திய அமைச்சர் வழங்கல்

வீடு தேடி மருந்து பெட்டகம் திட்டம்: மத்திய அமைச்சர் வழங்கல்
X

பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மருந்து பெட்டகத்தினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்

விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் வீடு தேடி சென்று மருந்து பெட்டகம் வழங்கினார்

வீடு தேடி மருந்து பெட்டகம் மத்திய அமைச்சர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ் படுத்துட்டு ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர், மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகத்தை வீடு தேடி சென்று மக்களிடம் வழங்கினார்,

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் (25.06.2022) சனிக்கிழமை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் தொடர் சிகிச்சை பெற்றுவரும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மருந்து பெட்டகத்தினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனா், நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார்,மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!