திண்டிவனம் அருகே நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

Government Bus | Villupuram News
X

ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து.

Government Bus -திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முதியவர் இறப்பில் நஷ்டஈடு வழங்காத அரசு பேருந்து நீதிமன்ற உத்தரவுபடி ஜப்தி செய்தனர்.

Government Bus -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காட்டு புஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன்(வயது 65). இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக ஓங்கூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம்-தாம்பரம் அரசு பேருந்தில் ஏறியபோது டிரைவர் மற்றும் கண்டக்டரின் கவன குறைவால் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

இந்த சம்பவம் கடந்த 22-7-2014 அன்று நடந்தது. இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட சுப்பராயன் குடும்பத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 720 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தார். ஆனால் நஷ்ட ஈடு வழங்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ரகுமான் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நஷ்ட ஈடு தொகையை வழங்காததால் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்யும்படி கடந்த 14-ந் தேதி தேதி உத்தரவிட்டார்.

அதன் பேரில் கோர்ட்டு அமினா ராபியா திண்டிவனத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்ல இருந்த அரசு பேருந்தை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!