முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சிலைக்கு மலர்மாலை
முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உருவ சிலைக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓமந்தூரில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 52-வது நினைவுநாள் நிகழ்ச்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழ்நாடு ரெட்டிநல சங்கம் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட ரெட்டிநலசங்க தலைவரும், திண்டிவனம் ஆரியாஸ் ஓட்டல் உரிமையாளருமான ராமன் என்கிற ராமகிருஷ்ணன் தலைமையில் ரெட்டிநலசங்க நிர்வாகிகள் ஓமந்தூரில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் ஓமந்தூர் ராமசாமிரெட்டியாரின் சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளும் ராமசாமி ரெட்டியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின்போது ரெட்டிநல சங்கத்தின் கவுரவ தலைவர் ரமணன், பொதுச்செயலாளர் வக்கீல் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் ரவிச்சந்திரன், இளைஞரணி ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவருமான தென்களவாய் பழனி, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் சேகர், கவுன்சிலர் ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் நந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu