திண்டிவனத்தில் பூட்டிய மரக்கடையில் பயங்கர தீ விபத்து

திண்டிவனத்தில் பூட்டிய மரக்கடையில் பயங்கர தீ விபத்து
X

திண்டிவனத்தில் மரக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ

திண்டிவனம் பகுதியில் உள்ள பூட்டிய ஒரு மரக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேரு வீதியில் கணபதி மரக்கடை இயங்கி வருகிறது. இந்த மரக்கடையில் இன்று திடீரென்று தீப்பற்றி எரிவதாக திண்டிவனம் நகர காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது.

அதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மரக்கடை உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் பின்பக்கமாக சென்று ஓட்டை பிரித்து உள்ளே சென்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.


சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால் தீயானது அருகில் இருந்த மரங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. மரம் அறுக்கும் இயந்திரம் மட்டும் எரிந்து சேதமானது.

தீயணைப்பு துறையினர் காலதாமதமாக சென்றிருந்தால் தீ அருகில் உள்ள மரங்களுக்கு பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். மரம் அறுக்கும் இயந்திரத்திற்கு வரும் மின் இணைப்பை நிறுத்தாமல் சென்றதால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!