திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் மின் தடை

திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் மின் தடை
X

பைல் படம்.

திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்ட மின்தடை நேரத்தை விட கூடுதலான மின்தடையால் மக்கள் அவதி அடைந்தனர்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காலை 9 மணி முதல் 2 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது.

நேற்று காலை 9 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் மதியம் இரண்டு மணியை கடந்தும் ஐந்து மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட மின்தடையை விட கூடுதலாக மின்நிறுத்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் எப்போது மின்சாரம் வரும் என தெரியாமல் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து திண்டிவனம் செயற்பொறியாளரிடம் கேட்டால் பணியை முடித்து விட்டோம் விழுப்புரத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்க உத்தரவு வந்தால் மட்டுமே மின்வினியோகம் செய்யப்படும் என பொறுப்பற்ற பதிலை தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களிலாவது இது போன்ற பராமரிப்பு பணிகள் பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags

Next Story
future of ai in retail