திண்டிவனத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி மனு

திண்டிவனத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி மனு
X

சாலையை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்

திண்டிவனம் பகுதியில் நீண்ட காலமாக குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ஹவுசிங்போர்டு மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கோரியும், கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தியும், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பார்த்திபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்டக்குழு உறுப்பினர் சத்தீஷ்குமார், திண்டிவனம் நகர நிர்வாகிகள் சச்சின், ஜார்ஜ் மற்றும் மரக்காணம் பகுதி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!