திண்டிவனம் பேருந்து நிலைய பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்..

Tindivanam New Bus Stand
Tindivanam New Bus Stand-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16-வது விழுப்புரம் மாவட்ட மாநாடு, ஆகஸ்ட் 7-ந்தேதி திண்டிவனம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து, தொடக்க உரையாற்றினார், மாவட்ட செயலாளர் சே.அறிவழகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநாட்டில், திண்டிவனத்தில் அடிக்கல் நாட்டி கிடப்பில் உள்ள புதிய பேருந்து நிலைய பணியை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி வளாக மரணங்களையும், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களையும், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்களின் ராணுவ கனவை சீரழிக்கும் அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி கடனை உடனே வழங்க வேண்டும், செஞ்சி பகுதியில் தொழிற்சாலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்,
மாநாட்டில் புதிய மாவட்ட நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக எஸ்.பிரகாஷ், மாவட்ட செயலாளராக சே.அறிவழகன், மாவட்ட பொருளாளராக கே. தேவநாதன், மாவட்ட துணைத்தலைவர்களாக எஸ்.பார்த்தீபன்,தீர்த்தமலை, மாவட்ட துணைச்செயலாளர்களாக ஏ.ம.சத்தீஷ்குமார், கிருஷ்ணராஜ் ஆகியோர் உட்பட 21 பேர் கொண்ட மாவட்ட குழு புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். திண்டிவனம் வட்ட செயலாளர் சத்தீஷ்குமார் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu