விழுப்புரம் அருகே சாலை விபத்தில் திமுக எம்பி மகன் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் திமுக எம்பி மகன் உயிரிழப்பு
X
விழுப்புரம் அருகே மரக்காணம் என்னுமிடத்தில் திமுக எம்பி இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்

மரக்காணம் அருகே சாலை விபத்து திமுக எம்பி மகன் உயிரிழந்தார்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஈ.சி.ஆர். சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நிடந்த சாலை விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன் உயிரிழந்தார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன்(21).. இவர், தனது நண்பர் சென்னையைச் சேர்ந்த வேதவிகாஷ்(21) என்பவருடன் புதன்கிழமை நள்ளிரவு ஜீப்பில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டனர்.சென்னையில் இருந்து இவர்கள் கிழக்கு கடற்கரை சாலை(ஈ.சி.ஆர்.) வழியாக சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை 3‌ மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்ப்புத்துப்பட்டு என்ற இடத்தில் சென்றபோது சாலையில் திடீரென மாடுகள் குறுகே வந்துள்ளன.

இதனை எதிர்பாராத ராகேஷ் ரங்கநாதன் உடனே காரை திரும்பியுள்ளார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதியது.இந்த விபத்தில் காரின்‌ முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த எம்.பி. இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் அவருடன் வந்த நண்பர் வேதவிகாஷ் பலத்த காயமடைந்தார்.

இத்தகவல் அறிந்து கோட்டக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த வேதவிகாஷை மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்த ராகேஷ் ரங்கநாதன் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுச்சேரி மாநிலம், கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!