திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலைய வரைபடம் வெளியீடு

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலைய வரைபடம் வெளியீடு
X

திண்டிவனம் புதிய பேருந்து நிலைய மாதிரி வரைபடத்தை வெளியிட்ட அமைச்சர்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மாதிரி வரைபடத்தை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகராட்சி பகுதியில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய பேருந்து நிலைய திட்ட வரைபடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி மற்றும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் இன்று (06.11.2021) திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், மண்டல இயக்குநர் பி.குபேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், மண்டல நகராட்சி நிர்வாக பொறியாளர் எல்.கமலநாதன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சே.ஷீலாதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!