திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு:போலீசார் விசாரணை

திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு:போலீசார் விசாரணை
X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு. அவரது மனைவி விஜயலட்சுமி. இவரது கணவன் இறந்துவிட்ட நிலையில், மகன் கவுதமுடன் வீட்டில் வசித்து வருகிறார். கவுதம் சென்னையில் தங்கி படித்து வரும் நிலையில், விஜயலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று சென்னையில் படித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு விஜயலட்சுமி சென்னைக்கு சென்றுள்ளார்.வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 6 பவுன் நகைமற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தங்க நகை திருடிய மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Tags

Next Story