நூறுநாள் வேலை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நூறுநாள் வேலை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

வட்டார துணை வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கைகளை வலியுறுத்திய மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நூறுநாள் வேலை வழங்குக வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூரில் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாற்று திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் வெண்மணியாத்தூர், ஒலக்கூர், வைரபுரம், சாத்தனூர், பாஞ்சாலம் ஆகிய ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை, நீல நிற வேலைஅட்டை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.


உடனடியாக ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், அதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், மாவட்ட செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒன்றிய செயலாளர், இளங்கோவன், பாதிக்கப்பட்ட ஊராட்சியை சேர்ந்த கிளை செயலாளர்கள் ஆகியோர் வட்டார துணை வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்,

பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார், அதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!