பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎன்லை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திண்டிவனத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியர்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் எஸ்.பார்திபன், முன்னாள் மாவட்ட தலைவர் எ.கண்ணதாசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ம.சத்தீஷ்குமார், திண்டிவனம் நகர செயலாளர் சதீஷ், நகர நிர்வாகிகள் சச்சின், விஜயன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் துரை உள்ளிட்ட பலர் கலந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!