திண்டிவனம் உட்கோட்ட காவல் குற்ற சம்பவங்கள்
காட்சி படம்
Villupuram Today News -விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே லாரி டிரைவர் உள்பட 6 மீது தாக்கிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ராவணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 75). இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த செந்தாமரை மகன் கார்த்தி என்பவர் அந்த பகுதியில் காரை நிறுத்தினார். அப்போது, அந்த வழியாக பாலமுருகன் தம்பி பார்த்திபன் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். இந்தநிலையில், கார்த்தியிடம் காரை ஓரமாக நிறுத்துமாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, சுப்பிரமணி, நாகராஜ், அருண், அஜித், ரஞ்சித், அன்பு, அமுதா ஆகியோர் சேர்ந்து பாலமுருகன், குப்புசாமி, பார்த்திபன், ஆறுமுகம், அலமேலு, நாகராஜ் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந் பாலமுருகன் தரப்பை சேர்ந்த 6 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்தி தரப்பை சேர்ந்த 8 பேர் மீது பிரம்மதேசம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் செஞ்சி ரோடு சந்தைமேடு அருகில் சுமார் 75 வயதுடைய மூதாட்டி காயத்துடன் கிடந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ரோஷனை போலீசார் விசாரித்தனர். அதில் அந்த மூதாட்டி திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியை சேர்ந்த கோதாவரி (வயது 75) என்பது தெரியவந்தது. மேலும் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனத்தில் வியாபாரி வீட்டில் தீ விபத்து
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ரொட்டிக்கார வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 80). இவருடைய மகன் கவுதமன் (47). இவர் நேரு வீதியில் முட்டை மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டுக்குள் இருந்து புகை வந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டுகுள் இருந்த ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவின் காரணமாக தீ விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டிவனம் போாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu