ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை குவிக்க அன்புமணி எம்பி வாழ்த்து

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 56 வீராங்கனைகள் உள்ளிட்ட 127 வீரர்களும் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் இந்திய அணியினர் பங்கேற்கின்றனர். பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து இதுவரை இல்லாத அளவில் பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்ப்பு,
தமிழ்நாட்டிலிருந்து இம்முறை 12 வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தொடர் ஓட்டம், கத்திச்சண்டை, டேபிள் டென்னிஸ், படகுப்போட்டி, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு தங்க வேட்டை நிகழ்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்பி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu