தமிழ்நாடு முதலிடம் என்பதையே விரும்புகிறேன் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலிடம் என்பதையே விரும்புகிறேன் முதலமைச்சர் ஸ்டாலின்
X

இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழாவில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முதலிடம் என்பதையே விரும்புகிறேன் என கூறினார்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், முதலியார் குப்பத்தில் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், நாட்டில் முதலமைச்சர் சர்வேயில் முதலிடம் என்பதை விட தமிழ்நாடு முதலிடம் என்பதையே விரும்புகிறேன் என கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் புதன்கிழமை கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி மகேஷ் தலைமை தாங்கினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில் முதலில் இந்த திட்டத்தை செயல்படுத்த காரணமான அதிகாரிகளுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன், இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைத் தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்குக் கற்றல் இடைவெளி மற்றும் இழப்பைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் மாலை, 1 முதல் 2 மணி நேரம் வரை 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை கொரோனா குறைத்துவிட்டது. கற்றல் இடைவெளிக்குக் காரணம் ஆசிரியர்கள், மாணவர்கள் அல்ல, கொரோனா காலம்தான். வீட்டுக்குள் வந்து கல்வியைக் கற்றுத்தரும் திட்டம்தான் இல்லம் தேடி கல்வித் திட்டம். இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும்.

இது கட்சியின் ஆட்சி இல்லை. இனத்தின் ஆட்சி. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தங்கள் அறிவையும், ஆற்றலையும் வழங்க முன்வந்தால் அரசு மனதார வரவேற்கும். அனைத்துத்தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் ஒரே அரசு திமுக அரசு மட்டுமே. யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இல்லம் தேடி கல்வி திட்டம் புரட்சிக்கர திட்டமாக மாறும். பெரியார், அண்ணா, கருணாநிதி போட்ட விதைகளை அடிப்படையாகக் கொண்டு தான் தமிழக அரசு இயங்கி வருகிறது, சர்வேயில் நான் முதலிடம் என்பதை விட தமிழ்நாடு முதலிடம் என்பதையே விரும்புகிறேன் என்று பேசினார்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்