திண்டிவனம் அருகே அரசு புறம்போக்கு இடத்துக்கு அடித்து கொள்ளும் தனிநபர்கள்

திண்டிவனம் அருகே அரசு புறம்போக்கு இடத்துக்கு அடித்து கொள்ளும் தனிநபர்கள்
X

திண்டிவனம் அருகே முருக்கேரி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடம் ஆக்ரமிப்பு 

திண்டிவனம் அருகே முருக்கேரி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை ஆக்ரமிப்பதில் சண்டை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட முருக்கேரி கிராமத்தில் அரசு வேளாண் துறைக்கு சொந்தமாக 16 செண்ட் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் ராஜா என்பவருக்கு கிராமத்தில் சொந்தமாக வீடு இருக்கும் நிலையில், அவரது தாயாரை வைத்து அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் அதில் வசித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் அதில் வைக்கோல் வைப்பதற்கு முயன்றுள்ளார். இதன் காரணமாக ராஜா என்பவருக்கும் பால சுந்தரம் என்பவருக்கு வாய் தகராறாக ஆரம்பித்து கைகலப்பாக மாறியது. அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

உடனடியாக சம்மந்தப்பட்ட துறை தலையிட்டு அரசு புறம்போக்கு இடத்தை ஆக்ரமிப்பு செய்துள்ள இருவரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!