மரக்காணம் அரசு மருத்துவமனையில் லஞ்சம்: நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. கோரிக்கை

மரக்காணம் அரசு மருத்துவமனையில் லஞ்சம்: நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. கோரிக்கை
X

மரக்காணம் அரசு மருத்துவமனை

மரக்காணம் அரசு மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கப்படுவதாக பா.ஜ.க.சார்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணத்தில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை, இந்த மருத்துவமனைக்கு பெரும்பாலும் சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர், இவர்களிடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆண் குழந்தை என்றால் எடு ஆயிரம், பெண் குழந்தை என்றால் எடு ஐநூறு என மிரட்டி வசூல் செய்து வருகின்றனராம், மேலும் அங்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற வருபவர்களிடம் துட்டு இல்லாமல் முதலுதவி இல்லையாம். இதில் அனைவரும் கூட்டு சேர்ந்து லஞ்ச மழையில் நனைந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் அங்கு உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்கி குடியிருந்து சிகிச்சை அளிக்க கொடுத்த அரசு குடியிருப்புகளில் வெளி நபர்கள் குடும்பம் நடத்தி வருவதாகவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி அந்த மருத்துவமனையில் நீண்ட நாட்களாக பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!