விழுப்புரம் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்
X

காலை சிற்றுண்டியை துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி பள்ளியில் அமைச்சர் மஸ்தான் இன்று வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு உணவு வழங்கி காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார், அதனையடுத்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி முருங்கம்பாக்க அரசு ஆரம்ப பள்ளியில் வெள்ளிக்கிழமை இன்று மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி, தானும் உண்டு காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா,முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, சார் ஆட்சியர் அமித், நகர் மன்ற தலைவர் நிர்மலா, நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!