மழை நிவாரணம் கேட்டு ஜனவரி 5ந்தேதி தொடர் காத்திருக்கும் ஆர்ப்பாட்டம்

மழை நிவாரணம் கேட்டு ஜனவரி 5ந்தேதி  தொடர் காத்திருக்கும் ஆர்ப்பாட்டம்
X

 தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் 

விழுப்புரம் மாவட்டத்தில் மழை நிவாரணம் கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருக்கும் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து எஸ். கமலக்கண்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது,

கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு ரூ. 5000 நிவாரணம் வழங்க வலியுறுத்தி 2022 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிவாரணம் கிடைக்கும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று கூட்டத்தில் முடிவு செய்தனர்,

இக்கூட்டத்தில் விதொச மாவட்ட தலைவர் வி. அர்ச்சுனன், நிர்வாகிகள் பி. சௌந்தர், ஜி. ஏழுமலை, எஸ்.அபிமன்னன், கே.சுந்தர். கே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!