முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை மாலை விழுப்புரத்தில் பின்னர் பிரசாரம் மேற்கொண்டார், பின்னர் விக்கிரவாண்டிக்கு சென்றார், அதனை தொடர்ந்து மயிலத்தில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது,
அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திண்டிவனம் அருகே உள்ள மேல்பாக்கத்தில் இருந்து 35-க்கும் மேற்பட்டவர்கள் சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர். சரக்கு வாகனத்தை மேல்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 23) என்பவர் ஓட்டினார். திண்டிவனம் கல்லூரி புறவழிச்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த ராஜமாணிக்கம்(73), முத்துவேல்(41), ராஜவேல்(50), மேகநாதன்(16), அஜய்(14), அஞ்சலை(50), ஆனந்தி(51), சுசீலா(55), காளியம்மாள்(50), சசிகலா(32), ஆராயி(30) உட்பட 34 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu