திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
X

பைல் படம்.

திண்டிவனம் அருகே ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதாமல் இருக்க திருப்பியபோது பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது.

விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த லாரி ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் எரிபொருள் இன்றி நின்றது.

அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் மோதாமல் இருக்க கார் டிரைவர் லாவகமாக திருப்பும் போது லாரி ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் பள்ளத்தில் இருந்து காரை மீட்டு படுகாயம் அடைந்த மதுரையைச் சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த நபர் மாவீரன் உள்ளிட்டோரை சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future