திண்டிவனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

திண்டிவனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு
X
திண்டிவனத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் செயின் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அருகே கீழ்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள், மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு , நேற்று இரவு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கீழ்மாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் , விஜயலட்சுமி அணிந்திருந்த, 10 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு, தப்பினர்.

இதுகுறித்து வெள்ளி மேடு பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து ஹெல்மெட் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!