பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் -அரசு மீது ஸ்டாலின் தாக்கு

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் -அரசு மீது ஸ்டாலின் தாக்கு
X

அதிமுக அரசு, பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான கற்பனை அறிவிப்புகள் எல்லாம் அறிவித்துள்ளனர். தமிழக நிர்வாகத்தை சீரழித்து விட்டனர். 2016ம் ஆண்டு மே மாதம் ஓசூர், சென்னையில் நடந்த கூட்டத்தில், ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழல் பெருகியுள்ளது, ஊழல் மிகுந்த இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். அதேபோல், மதுரை கூட்டத்தில் அமித்ஷா, ஊழல் மேல் ஊழல் செய்யும் ஆட்சிக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா என பேசினார்.

ஆனால் தற்போது ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி நாடகம் ஆடுகிறார் மோடி.தங்களது கொள்ளையில் இருந்து தப்பவே மோடியை ஆதரிக்கிறார் பழனிசாமி. இந்த நாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டமாக துவங்குகின்றனர். மக்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. இனி அமையவுள்ள திமுக ஆட்சியில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
ai problems in healthcare