இளைஞா் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினா் பணி
விழுப்புரம் மாவட்ட இளைஞா் நீதி குழுமத்தில் காலியாக உள்ள 2 சமூக நல உறுப்பினா் பதவிக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தகவல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் 2015 -ஆம் ஆண்டில் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட இளைஞா் நீதி குழுமத்தில் காலியாக உள்ள தலா ஒரு பெண், ஒரு ஆண் என்ற விகிதத்தில் 2 சமூக நல உறுப்பினா்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.
இதற்கு விண்ணப்பிப்பவா்கள் குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக அல்லது குழந்தை உளவியல், மனநலம் மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபா் இரு முறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவராவா். ஆனால், தொடா்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 15 நாள்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 156, சாரதாம்பாள் வீதி, நித்தியானந்தம் நகா், வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரம் அறிய 04146 - 290659 என்ற தொலைபேசி எண்,dcpuvpm1@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடா்புகொள்ளலாம், எனஆட்சியா் மோகன் அதில் தெரிவித்துள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu