ஒரு கோடிக்கு மேல் பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்

ஒரு கோடிக்கு மேல் பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்
X
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கோடிக்கு மேல் பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்.

அரசியல் கட்சியினர் பணமோ, பரிசுப்பொருட்களோ கொடுப்பதை தடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படை குழுக்களும், 21 நிலையான கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இதுவரை பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சத்து 79 ஆயிரத்து 180 ரொக்கம் மற்றும் அரிசி, புகையிலை பொருட்கள், கஞ்சா பொட்டலங்கள், சாராயம், மதுபாட்டில்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் என ரூ.21 லட்சத்து 64 ஆயிரத்து 271 மதிப்பிலான பொருட்கள் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 43 ஆயிரத்து 451 மதிப்புள்ள பணம், பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story