கொரோனாவை மீண்டும் ஜீரோவாக்கிய விழுப்புரம் மாவட்டம்

கொரோனாவை மீண்டும் ஜீரோவாக்கிய விழுப்புரம் மாவட்டம்
X
விழுப்புரம் மாவட்டம், கொரோனா நோயை கட்டுப்படுத்தி மீண்டும் பாதிப்பை ஜீரோவாக்கி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. இதுவரை 54,568 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் நேற்று ஒருவரும் இன்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று திங்கட்கிழமை 17 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 54,144 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

மீதமுள்ள 59 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவலை வேகமாக கட்டுப்படுத்தி கொரோனாவை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்தது, தற்போதும் கொரோனா பரவலை மாவட்டத்தில் மிக சரியாக எதிர்கொண்டு கட்படுத்தி கொரோனாவை மீண்டும் ஜீரோவாக்கி, விழுப்புரம் மாவட்டம் ஹீரோ என நிரூபித்துள்ளது

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்