விழுப்புரத்தில் ஊடக மையத்தை தேர்தல் மேலிட பார்வையாளர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), விக்கிரவாண்டி, வானூர் (தனி), விழுப்புரம் ஆகிய 7 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது/ இதுவரை 7 தொகுதிகளிலும் சேர்ந்து 50-க்கும் மேற்பட்டேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்,
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க, தேர்தல் ஆணையம் சார்பில் செலவின கண்காணிப்பு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகளவில் பணப் புழக்கம் இருக்கும் என்பதால், அங்கு மட்டும் தொகுதிக்கு ஒரு செலவினப் பார்வையாளர் என்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர், முன்னாள் அமைச்சர் போட்டியிடும் விழுப்புரம், திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு மட்டும் செலவினப் பார்வையாளர்கள் தொகுதிக்கு ஓர் அலுவலர் என்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளுக்கு இரண்டும், மூன்று தொகுதிகளுக்கு சேர்ந்து ஓர் அலுவலர் என்ற வகையில் நியயமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மனு தாக்கல் மார்ச் 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், விழுப்புரம் மாவட்டத்துக்கு தேர்தல் பொதுப் பார்வையாளரும் வருகை தந்துள்ளார். செஞ்சி, மயிலம் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் வினோத்குமார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை, மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை அவா் சந்தித்தார்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்காணிப்பு மையம், வாக்காளர் உதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தேர்தல் பொதுப் பார்வையாளருக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆ.அண்ணாதுரை விளக்கி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu