மயிலம் அருகில் முப்புளி கிராமத்தில் இலவச வீடு கட்டும் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு

மயிலம் அருகில்  முப்புளி கிராமத்தில் இலவச வீடு கட்டும் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு
X
மயிலம் தொகுதிக்கு உட்பட்ட முப்புளி கிராமத்தில் நேரில் சென்று இலவச வீடு கட்டும் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட முப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் திடிரென நேரில் சென்று ஆய்வு செய்தார், அப்போது பிரதமர் இலவச வீடு கட்டும் திட்டம் திட்டத்திற்கு முறையாக அனுமதி வழங்கப்படுகிறதா, வீடு கட்டப்படுகிறதா என பயனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து பாதிராபுலியூர் கிராமத்தில் குடும்ப அட்டை கார்களுக்கு கொரோனா நிதி மற்றும் 14 பொருட்கள் விடுபடாமல் வழங்கப்படுகிறதா என பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா உடனிருந்தார்.

Tags

Next Story
ai future project