விழுப்புரம் அருகேயுள்ள தமிழ் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு
மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் 84-ம் ஆண்டு கல்லூரி நிறுவியோர், மற்றும் விளையாட்டு விழா நடந்தது
மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் 84-ம் ஆண்டு கல்லூரி நிறுவியோர், மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
விழாவில், மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார். கல்லூரி செயலாளர் ராஜுவ் குமார் ராஜேந்திரன், முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழாவில் சிவக்குமார் எம்.எல்.ஏ.,மற்றும் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர் கலந்து கொண்டு, வாலிபால், கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம், கவிதை, கட்டுரை, பாட்டு, கோலப் போட்டி, ஓவியப், போட்டி, நடனப்போட்டி, ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள், மற்றும் கல்லூரியில் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில் சென்னை மத்திய நிறுவன செம்மொழி தமிழாய்வு முன்னாள் பதிவாளர் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினருமான பேராசிரியர் முத்துவேல் மற்றும் ஸ்ரீமத் சிவஞான பாலயசுவாமிகள், தமிழ் கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் லட்சாராமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் வீரமுத்து அனுராதா, ஜீவா, வேதாசலம், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துறை தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu