வீடுர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தண்ணீர் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தார்.
இதனால், விழுப்புரம் மாவட்டம் உள்பட தமிழகப் பகுதிகளில் 2,200 ஏக்கா் விளைநிலங்கள், புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கா் விளைநிலங்கள் என மொத்தம் 3,200 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையிலிருந்து ஒருபோக பாசனத்துக்காக (போதிய அளவு தண்ணீா் இருக்கும் வரை) 135 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் தமிழகப் பகுதியான வீடூா், சிறுவை, பொம்பூா், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி உள்ளிட்ட 11 கிராமங்களும், புதுவை மாநிலத்தில் 5 கிராமங்களும் பயன்பெறும் என தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu