எப்படியோ இருந்த நான், இப்படி மாறிட்டேன்: ஒரு கால்வாயின் மகிழ்ச்சி

எப்படியோ இருந்த நான், இப்படி மாறிட்டேன்: ஒரு  கால்வாயின் மகிழ்ச்சி
X

கால்வாயை சீரமைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கூட்டேரிபட்டில் தூர்ந்து போன வாய்க்காளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக சீரமைத்தது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சர்வீஸ் சாலை ஓரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் செல்லும் கால்வாய் தூர்ந்த நிலையில் மழைநீர் செல்ல வழியின்றியும், கால்வாய் மேல்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து அப்பகுதிக்கு செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் காணப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பி வைத்தனர், அதன் பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய (NHAI) உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊழியர்கள் தூர்ந்துபோன கால்வாயை சுத்தப்படுத்தியும், அதன்மேல் புதிய சிமெண்ட் சிலாப்புகளை அமைத்தனர்.

உடனடியாக இதை சரி செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இச்செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!