விழுப்புரம் அருகே மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியை திறந்த அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் அருகே மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியை திறந்த அமைச்சர் மஸ்தான்
X

விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூரில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கந்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கந்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.21.45 இலட்சம் மதிப்பீட்டில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டது.

60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.மோகன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!