வீடுர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆய்வு

வீடுர் அணையின் பாதுகாப்பு குறித்து  அமைச்சர் ஆய்வு
X

வீடூர் அணையை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி 

திண்டிவனம் வட்டம், மயிலம் அருகே உள்ள வீடுர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக திண்டிவனம் வட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடூர் அணையில் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வீடூர் அணையை அமைச்சர் பொன்முடி இன்று (07.11.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித்,சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), டாக்டர் இரா.இலட்சுமணன் (விழுப்புரம்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர், பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) செயற்பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!