செய்தி மக்கள் தொடர்புத்துறை விளம்பர படத்தை அமைச்சர் பார்வையிட்டார்

செய்தி மக்கள் தொடர்புத்துறை விளம்பர படத்தை அமைச்சர் பார்வையிட்டார்
X

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்ட குறும்படத்தை பார்வையிடும் அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த செய்தி மக்கள் தொடர்புத்துறை படத்தை அமைச்சர் பார்வையிட்டார்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் பொதுமக்கள் அறிந்திடும் வகையில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது.

இதனை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று (24.01.2022) நேரில் பார்வையிட்டு, பாராட்டினார், அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future