பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
X

பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கும் அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு இலவச வீட்டு கட்டும் ஆணையை பயனாளிகளுக்கு அமைச்சர் மஸ்தான்வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், மயிலம் தொகுதி பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு இன்று (25.01.2022) வழங்கினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!