மயிலம் பொம்மபுர ஆதினம் முதல்வருக்கு வாழ்த்து

மயிலம் பொம்மபுர ஆதினம் முதல்வருக்கு வாழ்த்து
X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோயில் நிர்வாகம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளது

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் வாழ்த்துச்செய்தி

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு சிவஞான பாலைய சுவாமிகள் திருமடம் மயிலம் பொம்மபுர ஆதீனம் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியுள்ளார்

அந்த வாழ்த்துச் செய்தியில், சாதுக்கள் சகவாசமும் சாஸ்திர விசாரணையும் திருவருளாலும் குருவருளாலும் மென்மேலும் பெருக தமிழக முதல்வராக தாங்கள் பெரும்பான்மையுடன் மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறோம்

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனுஞ் சொல்

எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என நீங்கள் உச்சரித்தது, தங்கள் தந்தைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது தமிழர்கள் முன்னோர்கள் ஆகியோரை மதித்து திறம்பட செயல்பட்டவர் கலைஞர். தங்கள் ஆட்சியில் வளர்ச்சிப் பாதையை அடையும் தமிழகம் என்பதில் பெருநம்பிக்கை கொண்டோம். மயிலம் முருகன் அருளால் மென்மேலும் வளர்க என வாழ்த்துகிறோம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!