மயிலம் அருகே கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது

மயிலம் அருகே கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது
X

மயிலம் அருகே  மூதாட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா 

Ganja Crime -விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

Ganja Crime -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டேரிபட்டில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற மூதாட்டியிடம் 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டேரிபட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மயிலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகர் மற்றும் காவல்துறையினர் கூட்டேரிப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்குள்ள மேம்பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த மூதாட்டி ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விஜயா வயது (60) என்பதும், தற்போது அவர் விழுப்புரம் கே.கோ.ரோடு, முக்தி அருகே உள்ள மணிநகரில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது அதில் ஒருகிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மேற்கொண்டு அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பல வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக விஜயா தெரிவித்தார். இதையடுத்து மணிநகரில் அவர் வசித்து வரும் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் அங்கு மறைத்து வைக்கப்படிருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயாவை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும். இதற்கிடையே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேரில் வந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிட்டு காவல்துறையினரை பாராட்டினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கள்ள சாராயம் கஞ்சா அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இது மாதிரியான போதைப் பொருட்கள் விற்பனையில் காவல்துறையினர் கண்ணில் சிக்காத வகையில் மூதாட்டி மற்றும் சிறுவர்களை போதை கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறையினரும் ரகசிய கண்காணிப்பு செய்து அவர்களை கண்டுபிடித்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோரை சட்டம் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருட்களை கடத்துவோர் தற்போதைய நிலையில் பயந்து பதுங்கிக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!