தீவனூரிவல் தவிச ஒன்றிய மாநாடு

தீவனூரிவல் தவிச ஒன்றிய மாநாடு
X

மாநாட்டில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

Conference Meeting- விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட தீவனூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.

Conference Meeting- விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மயிலம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் மாவட்ட துணைத்தலைவர் ஏழுமலை கொடியேற்றி வைத்தார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி முன்வைத்து பேசினார்.

பார்கவுண்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். சிப்காட்டிற்கு மயிலம் ஒன்றிய கொள்ளார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலம் கையகபடுத்தியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மயிலம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளர் ஜி.கோவிந்தசாமி, தலைவர் எஸ்.கமலக்கண்ணன், பொருளாளர் ஆர்.ஏழுமலை உட்பட 18 பேர் கொண்ட புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன், மாவட்ட தலைவர் பி.சிவராமன், மாநில குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!