மத்திய அரசை கண்டித்து மயிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து மயிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிஆர்ப்பாட்டம்
X

மயிலம் கூட்டேரிபட்டில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கூட்டேரிபட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வு, வேளாண் சட்டம் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மயிலம் ஒன்றிய செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர் தமிழரசன்,சுப்பரமணியன், காளிதாஸ், நாகராஜன், கோவிந்தசாமி, நாகப்பன், அபிமன்னன் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project