ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் அமைச்சரிடம் புகார்

ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் அமைச்சரிடம் புகார்
X

ஊராட்சி செயலர் மீதான  ஊழல் பட்டியலை அமைச்சர் மஸ்தானிடம் கிராம மக்கள் வழங்கினர்

மயிலம் அருகே காட்டுசிவிரி கிராம ஊராட்சி செயலர் மீது ஊழல் புகார் கொண்ட பட்டியலை அமைச்சர் மஸ்தானிடம் கிராம மக்கள் வழங்கினர்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட காட்டுசிவிரி கிராம ஊராட்சியில் செயலராக ஏழுமலை என்பவர் உள்ளார், இவர் ஊராட்சியில் அரசு ஒதுக்கிய பல்வேறு மக்கள் நல பணி, நூறுநாள் வேலை மற்றும் திட்டங்களில் இவர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதனால் அக்கிராம ஊராட்சி மக்கள் இவர் மீது ஊழல் குற்றசாட்டு எழுப்பி 350 பக்கம் கொண்ட புத்தக வடிவில் ஆதாரத்துடன் புகார் மனு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கொடுத்தும் அவர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை என தெரிகிறது.

இதனை தொடர்ந்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தானை சந்தித்து 350 பக்கம் கொண்ட ஊழல் ஆதார புத்தகத்தை கொடுத்து ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய கேட்டு கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!