விழுப்புரம் வீடுர் அணையில் கலெக்டர் திடீர் ஆய்வு

விழுப்புரம் வீடுர் அணையில் கலெக்டர் திடீர் ஆய்வு
X

வீடுர் அணையை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடுரில் அமைந்துள்ள அணையை இன்று கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக திண்டிவனம் வட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடூர் அணையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் நீர் கொள்ளளவினை மாவட்ட கலெக்டர் த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) வெ.ராஜேந்திரன், வீடூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!